மேலும்

மாதம்: October 2017

கூட்டமைப்புக்கு எதிரான தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டி – பசில் அறிவிப்பு

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கை முடக்கும் போராட்டம் இன்று

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாணத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகிந்த அணியினரின் பதவிகள் பறிப்பு – சந்திரிகாவுக்கு புதிய பதவி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கமவும், மகிந்தானந்த அழுத்கமகேயும் நீக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா கடற்படையில் விமானப்படைப் பிரிவை உருவாக்கத் திட்டம்

சிறிலங்காவின் கடல் எல்லைகளை கண்காணிக்கும், தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட கடற்படையின் விமானப்படைப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு 252 கோடி ரூபாவினால் குறைப்பு

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட சுமார் 252 கோடி ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானங்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – சிறிலங்கா விமானப்படைத் தளபதி

ட்ரோன் எனப்படும், ஆளில்லா விமானங்களினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர்மார்ஷல்  கபில ஜெயம்பதி தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது – சிறிலங்கா அதிபரிடம் கோரிய வீரவன்ச

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இனவாதமே மகிந்தவைத் தோற்கடித்தது – ராஜித சேனாரத்ன

மகிந்த ராஜபக்ச கடந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமைக்கு இனவாதமே காரணம் என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலரைச் சந்தித்தார் மங்கள

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலர் தோமஸ் சானொனை, சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நா நிபுணர்களின் பரிந்துரைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது – சிறிலங்கா

ஐ.நா சிறப்பு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.