மேலும்

சிறிலங்கா இராணுவத்தின் காட்சிக்காக இந்திய இராணுவத்தின் ஆயுதங்கள்

mithrashakthi-2017 (1)புனேயில் நடைபெறும் இந்திய – சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்கும், ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சியில், இந்திய இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள ஆயுதங்கள், சிறிலங்கா படையினருக்காக காட்சிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்கும் ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சி கடந்த வெள்ளிக்கிழமை புனேயில் உள்ள 2 ஆவது மராத்தி காலாட்படை பற்றாலியன் மைதானத்தில் ஆரம்பமானது.

இதில் சிறிலங்காவில் இருந்து சென்ற சிங்கப் படைப்பிரிவின் அணியினரும், இந்திய இராணுவத்தினரும் இணைந்து அணிவகுப்பில் பங்கேற்றனர்.

mithrashakthi-2017 (1)

mithrashakthi-2017 (2)

அத்துடன், இந்திய இராணுவத்தினரின் குர்க்கா படைப்பிரிவின் பாரம்பரிய நடனமும், சிறிலங்கா இராணுவத்தின் கண்டிய நடனமும் இடம்பெற்றன.

இந்த தொடக்க நாள் நிகழ்வில், இந்திய இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள ஆயுதங்கள் மற்றும் கருவிகள் சிறிலங்கா படையினருக்கு காட்சிப்படுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *