உடன்பாட்டை திருத்த மறுப்பு – கைவிரித்தது அனைத்துலக நாணய நிதியம்
பேரிடரின் பாதிப்பு ஏற்பட்டதால், சிறிலங்காவுடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்பாடு திருத்தப்படாது என்று அனைத்துலக நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான பயணத்தின் முடிவில், நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த கூட்டத்தின் போது, அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஆசிய மற்றும் பசுபிக் பிரிவின் பணிப்பாளர் கிருஷ்ணா சிறிநிவாசன், ஆசியா மற்றும் பசுபிக் துணை பணிப்பாளர் சஞ்சய் பந்த், குழுத் தலைவர் இவான் பாபகேர்ஜியோ மற்றும் வதிவிட பிரதிநிதி மார்த்தா வோல்டெமைக்கேல் ஆகியோர் அனைத்துலக நாணய நிதியத்தின் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
பேரிடருக்குப் பின்னர், அனைத்துலக நாணய நிதியத்தின் உடன்பாட்டைத் திருத்துமாறு கோரும்படி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியிருந்தது.
