விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக வடக்கில் இன்று கடையடைப்பு – பல பகுதிகள் முடக்கம்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மக்கள் பேரவையினால் அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால் இன்று வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும், இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.




