மேலும்

Tag Archives: ஜி.எல்.பீரிஸ்

சிறிலங்காவின் இராணுவத் தலைவர்கள் பிற நாடுகளில் கைது செய்யப்படும் ஆபத்து

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நிறுவப்பட்டுள்ள புலனாய்வுப் பொறிமுறையினால், சிறிலங்காவின் இராணுவத் தலைவர்கள் உலகளாவிய அதிகார வரம்புக்கு அமைய  பல்வேறு நாடுகளின் நீதிமன்றங்களினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக   கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு – ஐ.நாவிடம் முறையிட்ட பீரிஸ் குழு

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின்  வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஐ.நாவிடம், மக்கள் கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் – ஜி.எல்.பீரிசின் நூல் வெளியானது

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீளாய்வு செய்யும் நூல் ஒன்றை முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எழுதி வெளியிட்டுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டில் இருந்து பாதுகாக்கும் வசதிகளை கைவிடுகிறார் கோத்தா

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறந்த பாதுகாப்பை அளிக்கக் கூடியதாக இருந்த போதும், அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முடிவெடுத்திருந்தார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தேசிய நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மகிந்த

பாகிஸ்தான் தேசிய நாளை முன்னிட்டு கொழும்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும், அவரது அணியைச் சேர்ந்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியமைத்ததும் ஜெனிவா தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம் – ஜி.எல். பீரிஸ்

சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைத்த பின்னர், 2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் என்று, அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆட்சியைப் பிடிப்பார் என்று இந்திய வல்லுனர்கள் நம்புகிறார்கள் – பீரிஸ்

மகிந்த ராஜபக்ச ஆதரவு சக்திகள் இந்த ஆண்டு  தேசிய தேர்தலில் வெற்றியைப் பெற்று அரசாங்கத்தை அமைக்கும் என்று இந்தியாவின் வல்லுனர்களும், சிவில் சமூகமும் நம்புகிறது என, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இந்தியத் தலைவர்களைத் தேடிச் சென்று சந்தித்த மகிந்த

‘தி ஹிந்து’  நாளிதழ் குழுத்தினால் நடத்தப்படும், இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்க, பெங்களூரு சென்றிருந்த சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

பிரதமர், அமைச்சர்கள் பதவி நீக்கப்படவில்லை – என்கிறார் பீரிஸ்

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பணியில் ஈடுபடுவதற்கே மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதே தவிர, அவர்களை சட்டரீதியற்றவர்கள் என்ற அறிவிக்கவில்லை என, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இரகசியப் பேச்சு நடக்கவில்லை – மறுக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், மகிந்த ராஜபக்ச இரகசியப் பேச்சு எதையும் நடத்தவில்லை என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.