செம்மணியில் தொடங்கிய இனப்படுகொலை நினைவேந்தல் வார நிகழ்வுகள்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் நேற்று முதல் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா படையினரால் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட சுமார் 600 பேரின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுக்காலை செம்மணியில் இடம்பெற்றது.
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, ஈகச் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இனப்படுகொலை வாரத்தை முன்னிட்டு, இந்த வாரம் முழுவதும் வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.