சனியன்று சீனா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் மே 13 ஆம் நாள் சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சீனாவின் ஒரு பாதை ஒரு அணை திட்டம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா பிரதமர் சீனாவுக்குச் செல்லவுள்ளார்.
மூன்று நாட்கள் சீனாவில் தங்கியிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சு நடத்துவார்.
அத்துடன் அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பாகவும், சீன அரசு பிரதிநிதிகளுடன் அவர் பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா பிரதமருடன் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, நிரோசன் பெரேரா, ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோரும் பீஜி்ங் செல்லவுள்ளனர்.
2015ஆம் ஆண்டு சிறிலங்கா பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.