மேலும்

வித்தியா கொலை வழக்கு – மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்கவுள்ளது

punkuduthivu-vithyaபுங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு, மேல்நீதிமன்ற அமர்வு ஒன்றை நியமிக்குமாறு,  சிறிலங்காவின் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பிடம், சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 450 ஆவது பிரிவின் கீழ், மேல்நீதிமன்ற நீதிபதிகளையும், ஒரு தலைமை நீதிபதியையும் கொண்ட அமர்வை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபர் எழுத்துமூலம் நேற்றுக் கோரியுள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்கள் மீது  கடத்தல், கூட்டு வன்புணர்வு, கொலை, சட்டவிரோதமாக ஒன்று கூடியமை உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது, மாணவி வித்தியா சிவலோகநாதன், கொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *