மேலும்

குற்றவாளிகளின் கூடாரமாக பயன்படுத்தப்பட்ட சிறிலங்கா தூதரகங்கள் – ஒப்புக்கொள்ளும் சிறிலங்கா அரசு

mangala-unhrcசிறிலங்காவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கான புகலிடமாக வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“முன்னைய அரசாங்கத்தினால் தூதரகங்களில் அடைக்கலம் வழங்கப்பட்ட கொலை மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களில் பிரேசிலுக்கான துணைத் தூதுவராக பணியாற்றிய ஒருவரும், ஜேர்மனியில் உள்ள தூதரகத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய இரண்டு பேரும் அடங்குகின்றனர்.

நாட்டில் கொலைகள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கான பாதுகாப்பிடங்களாக சிறிலங்காவின் பல தூதுரகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

பரிசாக அவர்களுக்கு, வெளிநாடுகளில் உள்ள எமது தூதரகங்களில், நியமனங்கள் வழங்கப்பட்டன.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பிரேசிலுக்கான துணைத் தூதுவராக அனுப்பப்பட்ட ஒருவர் தூதரகப் பணியாளர் ஒருவரைக் கொலை செய்தவர் என்றும், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர் என்றும் குற்றச்சாட்டு உள்ளானவர்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலையின் இரண்டு முக்கிய சந்தேக நபர்களுக்கு பெர்லினில் உள்ள தூதரகத்தில் பதவிகள் அளிக்கப்பட்டிருந்தன.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *