வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம்
வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தழுவிய மிகப்பெரிய முழு அடைப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தழுவிய மிகப்பெரிய முழு அடைப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வீதி இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவின் முப்படைகளுடனும் இணைந்து செயற்படும் வகையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதியதொரு பதவியை உருவாக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேச்சு நடத்தினார். (இரண்டாம் இணைப்பு)
நோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் பேராளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 பெண்கள் அல்லது ஆண்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று நடக்கவுள்ள பேச்சுக்களின் போது திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்குமா என்பது நாளை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள வாக்கெடுப்பிலேயே தீர்மானிக்கப்படவுள்ளது.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை பிரதான சந்தேக நபருக்கு, இராஜதந்திரப் பதவியை தாம் வழங்கியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.