மேலும்

நோர்வே ‘தமிழ் 3′ வானொலியின் தமிழர் மூவர் – 2017 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்

tamil3_3tamilerநோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் பேராளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 பெண்கள் அல்லது ஆண்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.

இந்த ஆண்டு 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் Engel Paradis மண்டபத்தில் இடம் பெறவுள்ள தமிழ்3 இன் வருடாந்த “சங்கமம்” நிகழ்வில் இம்மதிப்பளிப்பு இடம்பெறவுள்ளது.

நோர்வேவாழ் தமிழ் மக்களிடமிருந்து இதற்கான பரிந்துரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தமிழ் 3 இன் தமிழர் மூவர்2017 மதிப்பளிப்பிற்கான வரைமுறைகள்:

இந்த ஆண்டிற்கான ‘நோர்வேஜிய தமிழ்’ (Norwegian-Tamils) முன்மாதிரி ஆளுமையாகத் தெரிவு செய்வதற்கு பின்வரும் வரையறையுடையோர் பரிந்துரைக்கப்படலாம்:

  • நோர்வேயை நிரந்தர வாழ்விடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும்
  • 18 முதல் 33 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • பெற்றோரில் குறைந்தது ஒருவர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

தமிழ் 3இற்கு அனுப்பி வைக்கப்படும் பரிந்துரைகள், ’தமிழர் மூவர்’ தெரிவுக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படும் மூவர் 28.05.2017 நடைபெறவுள்ள தமிழ் 3 வானொலியின் 3வது ஆண்டு விழாவில் மதிப்பளிக்கப்படுவர்.

உங்கள் பரிந்துரையையும் அதற்கான காரணத்தையும் radiotamil3@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு 20.05.17 (சனி) 12 மணிக்கு முதல் அனுப்பி வைக்குமாறு வேண்டி நிற்கின்றோம்.

தமிழ் 3 இன் தமிழர் மூவர் பரிந்துரை செய்பவரின் பெயர், முகவரி, தொலைபேசி,  மின்னஞ்சல்,  விபரங்களும், “தமிழ் 3இன் தமிழர் மூவர் – 2017″ இற்கு உங்களால் பரிந்துரைக்கப்படுபவர் பெயர், முகவரி,  பால், தொலைபேசி, மின்னஞ்சல், பரிந்துரைக்கப்படுவதற்கான காரணம் ஆகிய விபரங்களும் விண்ணப்பத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *