மேலும்

அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டங்கள் முதலீடுகளை பாதிக்கும் – சீனத் தூதுவர் எச்சரிக்கை

Yi Xianlingஅம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கைத்தொழில் முதலீட்டு வலயத்தில் முதலீடு செய்ய ஏற்கனவே இணங்கியிருந்த முதலீட்டாளர்களைத் திசை திருப்பி விடும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் எச்சரித்துள்ளார்.

ஒரு அணை ஒரு பாதை திட்டம் என்ற தொனிப்பொருளில், பண்டாநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளுக்கு கைத்தொழில் வலயம் முக்கியமானது.

அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் 3 தொடக்கம் 5 பில்லியன் டொலரை அம்பாந்தோட்டையில் முதலீடு செய்யுமாறு 10 பாரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளிடம், நான் வலியுறுத்தியிருந்தேன். அவர்களில் பெரும்பாலானவர்கள், 500 வரையான நிறுவனங்களை வைத்திருப்பவர்கள். ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்றால், அவர்களை நான் எப்படி வற்புறுத்த முடியும்,?

அவர்கள் என்னை அணுகிய போது, என்னிடம் கேட்காதீர்கள், சிறிலங்கா தலைவர்களிடம் பதிலைக் கேளுங்கள் என்று கூறினேன். எனினும்,இங்கு முதலீடு செய்யுமாறு  நான் அவர்களை ஊக்குவித்தேன். சிறிலங்கா- இந்தியா இடையிலான ஒத்துழைப்பு எதிர்காலத்தில் வெற்றிகரமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

Yi Xianling

சிறிலங்காவின் உள்ளக அரசியலில் தலையீடு செய்வதற்கு சீனா ஆர்வம் காட்டாது. அம்பாந்தோட்டையில் கலாசார நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது, அவர்களின் நிலங்களை அவர்களின் அனுமதியின்றி பெற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறியிருந்தேன்.

நான் அம்பாந்தோட்டை மாவட்டச் செயலருடன் பேசிய போது, நாம் முதலீட்டுச் சபைக்கு ஒதுக்கப்பட்ட காணிகளையும், துறைமுகத்தின் முதற்கட்டத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட காணிகளையுமே பயன்படுத்த விரும்புகிறோம் எனக் கூறினேன்.

துறைமுகம் சிறிலங்காவுக்குச் சொந்தமானது, இதுபற்றிய உடன்பாடு இன்னமும் கையெழுத்திடப்படவில்லை. வரைவு உடன்பாடு மாத்திரமே கைடியழுத்திடப்பட்டுள்ளது.

எமக்கான பங்கைப் பெறும் போது,   அரசாங்க நடைமுறைகளை முழுமையாக மதிப்போம். அரசியல்வாதிகள் அல்லது அரசியல் குழுக்கள், தற்போதைய, எதிர்காலத் தலைவர்களுக்கிடையிலான உள்நாட்டு அரசியல் வேறுபாடுகளில் தலையிடும் எண்ணம் எமக்குக் கிடையாது.

சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகள், சிறப்பு வலயங்கள் மூலமே வேகமாக அபிவிருத்தி அடைந்தன.

உங்களின் நிலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க இதுதான் வழி என்றால், நீங்கள் எங்குமே கைத்தொழில்களை தொடங்க முடியாது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தாமதிக்கப்பட்ட போது, பொறுமையாக இருக்குமாறும், சிறிலங்கா  அரசு மற்றும் மக்களுடன் இயல்பாக பணியாற்றுமாறும் சீன அதிபர் அறிவுரை கூறியிருந்தார். நான் பொறுமையுடன் இருந்தேன். ஆனால், வர்த்தக சமூகத்தின் பொறுமை குறித்து கரிசனை கொள்கிறேன்.

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும இடையில் பொதுவாக எந்த பிரச்சினையோ, வேறுபாடுகளோ இல்லை. சில அமைச்சர்களுடன் தான் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறபாடுகள் அல்ல.

சீனா ஏற்கனவே சிறிலங்காவுக்கான  முதல்தர நிதி உதவியாளராக இருக்கிறது. கடந்த ஆண்டில் கொடைகள் மற்றும் வர்த்தக, பிற கடன்கள் என்னும் வகையில், 10 பில்லியன் ரென்மின்பி சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *