மேலும்

மாதம்: August 2016

முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி – குற்றச்சாட்டை விசாரிக்கக் கோருகிறார் கோத்தா

புனர்வாழ்வின் போது, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரச மருத்துவர்களைக் கொண்டு உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாலம் அமைக்கும் தேசத்துரோகத்தை அரசாங்கம் செய்யாது – என்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தியா – சிறிலங்கா இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சிறிலங்கா இணங்கியிருப்பதாக வெளியாகும் தகவல்களில் எந்த உண்மையும் கிடையாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமெரிக்க, சிறிலங்கா படைகளுக்கிடையில் முதல்முறையாக பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்

சிறிலங்கா- அமெரிக்க ஆயுதப்படைகளுக்கு இடையில் முதலாவது செயல்மட்ட இருதரப்பு பாதுகாப்புக் கலந்துரையாடல், கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இரண்டு நாட்கள் கொழும்பில் நடத்தப்பட்டது.

அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம்

கூட்டு எதிரணியினரின் எதிர்ப்புகள், கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரஅவசரமாக நிறைவேற்றப்பட்டது.

கொழும்பு வந்தார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச் செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.

மைத்திரி, ரணில், சம்பந்தனை இன்று சந்திக்கிறார் நோர்வே பிரதமர்

விடுமுறையைக் கழிப்பதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்தவாரம் சிறிலங்கா வந்திருந்த நோர்வே பிரதமர் எர்ணா சொல்பேர்க், இன்று சிறிலங்கா அரச தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டி- மொங்கோலிய வீரரிடம் துளசி தருமலிங்கம் தோல்வி

றியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், நேற்று நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் கட்டார் நாட்டு அணியின் சார்பில் பங்கேற்ற, ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், மொங்கோலிய நாட்டு வீரரிடம் தோல்வியடைந்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை கைது செய்ய வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்காவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும், எல்லா மக்களினதும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், உயர்மட்ட அரசாங்கத் தலைவர்களும் முன்வர வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.

செயலணிக்குள் விக்னேஸ்வரனை சேர்க்க முடியாது – ரணில் திட்டவட்டம்

வடக்கு மாகாணத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரை உள்ளீர்ப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.

தவறு செய்து விட்டோம்- புலம்பும் கம்மன்பில

காணாமற்போனோர் பணியகத்தை அமைக்கும் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யத் தவறி விட்டதாக, மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி ஒப்புக்கொண்டுள்ளது.