மேலும்

அமெரிக்க, சிறிலங்கா படைகளுக்கிடையில் முதல்முறையாக பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்

US - Sri Lanka Defence Dialogue (1)சிறிலங்கா- அமெரிக்க ஆயுதப்படைகளுக்கு இடையில் முதலாவது செயல்மட்ட இருதரப்பு பாதுகாப்புக் கலந்துரையாடல், கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இரண்டு நாட்கள் கொழும்பில் நடத்தப்பட்டது.

சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் கடந்த 8 மற்றும் 9ஆம் நாள்களில் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

சிறிலங்கா தரப்பில், பாதுகாப்பு அமைச்சு, கூட்டுப்படைகளின் தலைமையகம், முப்படைகளின் தலைமையக அதிகாரிகள் இந்தப் பேச்சுக்களில் பங்கெடுத்தனர்.

US - Sri Lanka Defence Dialogue (1)US - Sri Lanka Defence Dialogue (2)US - Sri Lanka Defence Dialogue (3)US - Sri Lanka Defence Dialogue (4)

செயற்பாட்டு மட்டத்தில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக இருநாடுகளினதும் ஆயுதப்படைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.

அமெரிக்க- சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையில், இருதரப்பு பயிற்சிகள், ஒத்திகைகளை நடத்துவதற்கு, 2016ஆம் ஆண்டு தொடக்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அட்டவணையை வரைவதே இந்தப் பேச்சுக்களின் நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *