மேலும்

கொழும்பு அனைத்துலக நிதி நகரம் – சீனாவுடன் முத்தரப்பு உடன்பாடு கைச்சாத்து

port-cityகொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய முத்தரப்பு உடன்பாடு கொழும்பில் நேற்றுக் கையெழுத்திடப்பட்டது.

சீனாவின் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டில், துறைமுக நகரத் திட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடைநிறுத்தப்பட்ட திட்டத்தை, மீள ஆரம்பிக்கும் வகையில் இந்த முத்தரப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு அனைத்துலக நிதி நகரம் என்ற பெயரில் இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ள உடன்பாட்டில்,  பெருநகர, மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை,  சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.

முன்னைய உடன்பாட்டில், கடலில் இருந்து மீட்கப்படும் நிலத்தின் பரப்பளவு, 233 ஹெக்ரெயராக இருந்தது, எனினும் புதிய உடன்பாட்டுக்கு அமைய, கொழும்பு அனைத்துலக நிதி நகரத்துக்காக 269 ஹெக்ரெயர் நிலம் புதிதாக உருவாக்கப்படவுள்ளது.

பொதுப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள நிலத்தில் அளவு, 63 ஹெக்ரெயர் இருந்து, 91 ஹெக்ரெயராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மேலும், 62 ஹெக்ரெயர் நிலத்தில், அனைத்துலக நிதி நிலையம் உள்ளிட்ட அரச முயற்சியிலான திட்டங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் புதிதாக உருவாக்கப்படும் நிலப்பகுதியில், 153 ஹெக்ரெயர் பரப்பளவு சிறிலங்கா அரசாங்கத்திடமே இருக்கும்

இந்த திட்டத்தின் மூலம் 13 ஹெக்ரெயர் பரப்பளவில் மிகப்பெரிய கடற்கரை உருவாக்கப்படும். இது காலிமுகத்திடலை விட எட்டு மடங்கு பெரியதாகும்.

சீன நிறுவனத்துக்கு நிலம் 99 1ஆண்டு குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படவுள்ளது.

கடற்கரையில் இருந்து 3 தொடக்கம் 4 கி.மீ தொலைவிலேயே கடலில் இருந்து மண்ணை அகழ்வு செய்ய சீன நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படும். அதுவும் கடலின் ஆழம் 15 மீற்றருக்கு அதிகமாக உள்ள பகுதியில், 3 மீற்றர் வரையே மண் அகழ்வுக்கு அனுமதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *