மேலும்

யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடாது

university- meeting (1)யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக தேவையான ஒழுக்காற்று நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொள்ளும் என்றும், அதில் அரசாங்கம் தலையிடாது என்று சிறிலங்கா அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் டி.எம்.சுவாமிநாதன், அனுர பிரியதர்சன யாப்பா மற்றும், பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோர் நேற்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நிர்வாகத்தினர், மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தின் முடிவிலேயே, ஒழுக்காற்ற நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடாது என்று அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

university- meeting (2)

‘இது ஒரு பயனுள்ள சந்திப்பாக இருந்தது. இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமானது என்று அனைவரும் ஏற்றுக் கொண்டனர். யாழ். பல்கலைக்கழகம் முழுமையாக மூடப்படவில்லை. இன்று புதன்கிழமை தொடக்கம் பல்கலைக்கழக செயற்பாடுகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும்.

பல்கலைக்கழகத்தில் வழமையான நிலை உள்ளதாகவும், அதனை மீளத் திறக்க வேண்டும் என்றும் மாணவர்களும், சிங்கள மாணவிகளும் தெரிவித்தனர்.

தாம் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருப்பதாகவும் தொடர்ந்து தங்கியிருப்போம் என்றும் அவர்கள் கூறினார்.

மோதல்களில் ஈடுபட்டவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையீடு செய்யாது.” என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, ஒழுக்காற்று நடவடிக்கைகள் பல்கலைக்கழக மட்டத்திலேயே மேற்கொள்ளப்படும் என்று பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்த அமைச்சர்கள் குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், பொது அமைப்புகள் மற்றும் சர்வமதத் தலைவர்களையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *