மேலும்

அரசியலமைப்பு திருத்தத்தில் அமெரிக்கா தலையீடு – கூட்டு எதிர்க்கட்சி விசனம்

eagle-flag-usaஅரசியலமைப்புத் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்கா கருத்தரங்கை நடத்துவது குறித்து, கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுபினர் தினேஸ் குணவர்த்தன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியலமைப்புத் தொடர்பான கருத்தரங்கு ஒன்று வரும் 29ஆம் நாள் அமெரிக்காவின் யுஎஸ் எய்ட் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பத்தரமுல்ல வோட்டர் எட்ஜ் விடுதியில் நடத்தப்படவுள்ள இந்தக் கருத்தரங்கிற்கு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே, யுஎஸ் எய்ட் உதவியுடன் நாடாளுமன்றத்தின், பொதுக்கணக்கு குழு மற்றும், பொதுத்துறை குழு ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கு கடந்த 14ஆம் நாள்  நல்லாட்சி தொடர்பான கருத்தரங்கு நடத்தப்பட்டிருந்தது.

usaid-confrence (1)usaid-confrence (2)

இந்த நிலையிலேயே, அரசியலமைப்புத் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கருத்தரங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்காவின் அரசியலமைப்பு உருவாக்கத்தில் அமெரிக்கா ஏன் தலையிடுகிறது? இது ஒரு உள்நாட்டுச் செயல்முறை, இது இலங்கையர்களால் தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *