மேலும்

நியூசிலாந்து பிரதமர் சிறிலங்கா வருகிறார்

john_keyநியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ அடுத்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகம் தொடர்பான அனைத்துலக மாநாடு ஒன்றில் பங்கேற்கவே, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ சிறிலங்கா வரவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்காவின் வெளிவிவகாரச் சேவை இப்போது வலுவானதாக இருப்பதாகவும், அதனால், வெளிநாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடிந்திருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *