மேலும்

Tag Archives: தமிழ்

அரபு மொழிக்கு ஆப்பு வைத்தார் சிறிலங்கா பிரதமர்

வீதிகளின் பெயர்ப்பலகைகள் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகள் தவிர்ந்த வேறெந்த மொழிகளும் இடம்பெறக் கூடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்தை மூடத் தயாரா? – சிறிலங்கா அதிபருக்கு அமைச்சர் சவால்

தனது அனுமதியின்றி 40/1  தீர்மானத்தில் கையெழுத்திடப்பட்டது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறுவாரெனின், ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகத்தை மூடுவதற்கு அவர் உத்தரவிட வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி, பௌத்தத்துக்கு முன்னுரிமை – ஐக்கிய தேசிய முன்னணி முடிவு

புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களைச் செய்வதில்லை என்றும், ஐக்கிய தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவை இன்று சமர்ப்பிக்கிறது ஜேவிபி

நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்கும் வகையிலான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரவை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக, ஜேவிபி தெரிவித்துள்ளது.

பிராந்திய செயலகங்களை அமைக்க காணாமல் போனோர் பணியகத்துக்கு அதிகாரம்

காணாமல் போனோர் பணியகம் பிராந்திய செயலகங்களை அமைக்க முடியும் என்றும், அதற்கு காணாமல் போனோர் பணியக சட்டத்தில் இடமிருப்பதாகவும்,  தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை, போர்க்குற்ற விசாரணை எதற்கு? – ராஜித சேனாரத்ன கேள்வி

இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவுமில்லை, அவ்வாறு இடம்பெற்றதாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவுமில்லை. இந்தநிலையில், போர்க்குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன  தெரிவித்தார்.

தமிழ், முஸ்லிம் தலைவர்களைச் சந்திக்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.

தமிழையும் அரசகரும மொழியாக அறிவிப்பதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு

சிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட உபகுழு சமர்ப்பித்த, தமிழையும் அரச கரும மொழியாக அறிவிக்கும் யோசனைக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இனவாதம் கக்கும் சிறிலங்காவின் பௌத்த பிக்குகள்

சிறிலங்காவின் அதிகாரத்துவ பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களுக்கும்,  தமிழர்களுக்கும்  இடையில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது மே 2009ல் நிறைவுக்கு வந்தது.

இன்று சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் – தமிழிலும் தேசியகீதம் பாட ஏற்பாடு

சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வு இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்படவுள்ளது.