மேலும்

Tag Archives: காணாமற்போனோர்

விரைவில் உண்மை கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படும்- ஹர்ஷ டி சில்வா

சிறிலங்கா அரசாங்கம் விரைவில் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

15 பேரின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க அலரி மாளிகைச் சந்திப்பில் இணக்கம்?

காணாமலாக்கப்பட்டோரின் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நேற்று நடந்த சந்திப்பில், காணாமலாக்கப்பட்ட 15 பேர் தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமற்போனோர் பணியக சட்டம் – முட்டுக்கட்டை போட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகம் தொடர்பான சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து கரிசனை வெளியிட்டு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

காணாமற்போனோரின் கதி என்ன? – 12 மாதங்களுக்குள் அறியத் தருவாராம் பரணகம

தமது ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை இன்னும் 12 மாதங்களுக்கு நீடித்தால், காணாமற்போனோர் தொடர்பான 20 ஆயிரம் முறைப்பாடுகளுக்கு நிச்சயம் தீர்வு பெற்றுக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம.

சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க அவசரப்படமாட்டோம் – என்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தை  அமைக்கும் விவகாரத்தில், தமது அரசாங்கம் அவசரமாகச் செயற்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆறு மாதகால பதவிநீடிப்புக் கேட்கிறது பரணகம ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும், அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடையவுள்ள நிலையில், மேலும் ஆறு மாதகால பதவி நீடிப்பைக் கோரவுள்ளது.

பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் – சுமந்திரன்

காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை நடத்தும் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோருக்கு மரணச்சான்றிதழ் பெறுமாறு அழுத்தம் கொடுக்கும் ஆணைக்குழு

யாழ். மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பான விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு நடத்தி வரும், அமர்வில் சாட்சியமளிக்கும், உறவுகளிடம், மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் பெற்றுக் கொள்ளுமாறு ஆணைக்குழு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நல்லிணக்க முயற்சிகளில் சிறிலங்கா – சமந்தா பவர் பாராட்டு

மூன்று பத்தாண்டுகளாக நீடித்த பிரிவினை கோரிய உள்நாட்டுப் போருக்குப் பின்னர், சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் முயற்சிகளை ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் பாராட்டியுள்ளார்.

காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு அத்தாட்சிப் பத்திரங்கள்

போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் காணாமற்போனோர் விவகாரம் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக போரின் இறுதிக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பாக தற்போது பல்வேறு அழுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.