மேலும்

பீல்ட் மார்சல் பதவியைக் கோரவில்லை, தந்தால் ஏற்பேன்- என்கிறார் ஜெனரல் பொன்சேகா

Sarath-Fonsekaதன்னை பீல்ட் மார்சல் தரத்துக்கு பதவி உயர்த்துமாறு தாம் கோரவில்லை என்றும், அரசாங்கம் அந்தப் பட்டத்தை அளிக்க முன்வந்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.

‘நான் எந்த பதவி உயர்வையும் கோரவில்லை. ஆனால், நான்கு நட்சத்திர ஜெனரல் ஒருவரை ஐந்து நட்சத்திர பீல்ட் மார்சலாக தரமுயர்த்துவது இலகுவான காரியமல்ல.

அதனை ஒரே இரவில் செய்து விட முடியாது. உலகில்  சுமார் 25 பீல்ட் மார்சல்கள் மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன்.

பீல்ட் மார்சலாகத் தரமுயர்த்துவதற்கு சட்ட நடைமுறைகள் பல உள்ளன. சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறைகளின்படி, வரத்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும்.

பாதுகாப்புத்துறையில் புதிய அரசாங்கம் செய்துள்ள நியமனங்கள் திருப்தியளிக்கவில்லை.தேசிய பாதுகாப்பை நன்கு அனுபவம் வாய்ந்தவர்கள் கையாள வேண்டும்.

பாதுகாப்புச் செயலர் பதவியை என்னால் ஏற்க முடியாது. நான் இப்போது ஒரு அரசியல்வாதி. பாதுகாப்புச் செயலர் பதவியை ஏற்பதானால், அரசியலைக் கைவிட வேண்டும்.

அதைவிட இன்னொரு காரணம், கோத்தாபய ராஜபக்ச வகித்த பதவியை ஏற்க நான் தயாராக இல்லை.

அவர் இராணுவத்தில் என்னை விட கீழ் நிலையில் பணியாற்றிய ஒரு அதிகாரியாவார்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *