சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா விசாரணை அறிக்கை தயார்
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தி வந்த விசாரணை தொடர்பான அறிக்கை தயாரிப்புப் பணி முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தி வந்த விசாரணை தொடர்பான அறிக்கை தயாரிப்புப் பணி முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வெலிவேரிய, ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட- தற்போது வெளிநாட்டில் இராஜதந்திரப் பதவி வகித்து வரும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை, திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 14ம் நாள் இரண்டு நாள் அதிகாரபூர்வ அரசுமுறைப் பயணமாக சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடந்த சட்டமா அதிபர்கள் மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கச் சென்ற போது, அங்கு பணியாற்றிய சீனர் ஒருவரிடம் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்று இரண்டு வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட, 27 பேரை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஒரு மாத காலத்துக்குள் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதிக்கு சிறிலங்கா மீது விதிக்கப்பட்டுள்ள தடையை பிற்போடக் கோரும் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை பிரசெல்ஸ் செல்லவுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா அதிபரின் மூத்த வெளிவிவகார ஆலோசகர் ஜயந்த தனபால நாளை ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார்.
அரசாங்கப் பணத்தை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் தனியான கணக்கில் வைத்திருந்தது அரசியலமைப்பை மீறும் செயல் என்று சிறிலங்காவின் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.சி.மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.