மேலும்

Archives

ஜப்பான்- சிறிலங்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்

ஜப்பான்- சிறிலங்கா  பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல் நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அழைப்பின் பேரில், ஜப்பானிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது.

ஜேர்மனி, சுவிஸ், துருக்கி தாக்குதல்களால் அதிர்ச்சியில் ஐரோப்பா

ஜேர்மனியின் பேர்லின் நகரில் பார ஊர்தி ஒன்றை சந்தைக்குள் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும், துருக்கியில் ரஷ்யத் தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்பன ஐரோப்பாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லைப் புறத்தைச் சுற்றிவளைக்கும் சீனா – என்ன செய்யப் போகிறது இந்தியா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் நாள், ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன என அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை எண்ணியல் (டிஜிற்றல்) மற்றும் பணமில்லா பொருளாதாரமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சி தொடர்பில் பெரும்பாலான இந்தியர்கள் கவனத்தைக் குவித்திருந்தனர்.

சாவகச்சேரி கோர விபத்தில் 10 பேர் பலி – 20 பேர் காயம்

சாவகச்சேரியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில், தென்னிலங்கையில் இருந்து நயினாதீவுக்கு யாத்திரை சென்ற 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

அம்பாந்தோட்டையில் கடற்படை, விமானப்படைத் தளங்களை அமைக்க சிறிலங்கா அரசு உத்தரவு

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகே நிரந்தர கடற்படைத் தளம் ஒன்றை அமைக்கவும், மத்தல விமான நிலையம் அருகே நிரந்த விமானப்படைத் தளம் ஒன்றை அமைக்கவும் சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தவில்லை – என்கிறார் மங்கள

மலேசியாவில் சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி எதிர்ப்பு வெளியிடுபவர்கள், இலங்கைத் தமிழர்கள் அல்ல என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கப்பல்களை விடுவிக்குமாறு கடற்படைத் தளபதிக்கு உத்தரவிட்டது அரசாங்கமே – சிறிலங்கா பிரதமர்

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல்களை விடுவிக்க சிறிலங்கா கடற்படைக்கு, அரசாங்கமே உத்தரவிட்டது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிலங்கா கடற்படைக்கு கோவாவில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது

சிறிலங்கா கடற்படைக்காக கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் காலி கலந்துரையாடலின் முக்கியத்துவம்

‘காலி கலந்துரையாடல்’, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படை ஆகியன இணைந்து நடத்திய ஒரு வருடாந்த அனைத்துலக கடல்சார் கருத்தரங்கு ஆகும். கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற ஏழாவது காலி கலந்துரையாடலானது ‘கடல்சார் கூட்டுப் பங்களிப்பு தொடர்பான மூலோபாயத்தை மேம்படுத்துதல்’ என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

சீனாவுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்பு – அம்பாந்தோட்டையில் வெடிக்கும் போராட்டம்

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.