மேலும்

Archives

வீமன்காமத்தில் பான் கீ மூன் – மீளக்குடியேறிய மக்களை சந்தித்தார்

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட  ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வலி.வடக்கில் அண்மையில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் ஐ.நா பொதுச்செயலர் – கூட்டமைப்பையும் சந்தித்தார்

யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ  மூன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

“மகிந்தவே வெளியேறு” – மலேசியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவை மலேசியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரி, இன்று காலை கோலாலம்பூரில் நூற்றுக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடா இடைத்தேர்தலில் ஒரே தொகுதியில் மோதிய இரு தமிழ் வேட்பாளர்களும் தோல்வி

கனடாவில் ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தின், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதிக்கு நேற்று நடந்த இடைத்தேர்தலில், இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினர்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஐ.நா பொதுச்செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்றுமாலை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஐ.நா பொதுச்செயலருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தலையீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிங்களத் தேசியவாத அமைப்புகள் நேற்று எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டன.

நேற்றிரவு கொழும்பு வந்தார் பான் கீ மூன் – சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு

மூன்று நாள் பயணமாக நேற்றுமுன்னிரவு கொழும்பு வந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்றிரவு பேச்சுக்களை நடத்தினார்.

சிறிலங்கா இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் றொசான் செனிவிரத்ன நியமனம்

சிறிலங்கா இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் றொசான் செனிவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (30.08.2016) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

கனகராயன்குளத்தில் மர்மநபர்களால் சேதமாக்கப்பட்ட புத்தர்சிலை

வவுனியா- கனகராயன்குளத்தில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரால் கைவிடப்பட்ட முகாமில், அமைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை நேற்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வந்தது அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி விநியோகக் கப்பல்

அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிகளுக்கான உதவி மற்றும் விநியோகக் கப்பலான, யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.