மேலும்

மியாமி கடலில் இலங்கையர்களுடன் சென்ற படகு மீது அமெரிக்க கடலோரக் காவல்படை சூடு

U.S. Coast Guard cutter Paul Clarkஅமெரிக்காவுக்குள் படகு ஒன்றின் மூலம் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 6 இலங்கையர்கள் உள்ளிட்ட 15 பேர் அமெரிக்க கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கியூபாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒருவரே, இந்த சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கையை ஒழுங்கு செய்திருந்தார் என்று சந்தேகிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 15 பேரில் அவரும் அடங்கியுள்ளார்.

அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு  பிரிவு கண்காணிப்பு விமானம் ஒன்றினால் கடந்த செவ்வாய்க்கிழமை பஹாமாஸ் அருகே கப்பல் ஒன்றில் இந்தக் குடியேற்றவாசிகள் இருப்பதை கண்டறிந்திருந்தது.

மியாமிக்கு தென்கிழக்காக 12 கடல் மைல் தொலைவில் இந்தக் கப்பலை, தடுக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் முனைந்தனர். ஆனால் கப்பல் நிறுத்தப்படவில்லை.

U.S. Coast Guard cutter Paul Clark

“போல் கிளார்க்” கப்பல்

இதையடுத்து அதிகாரிகள் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தனர் என்று கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலோரக் காவல்படையின் “போல் கிளார்க்” கப்பல் வந்தவுடன், கப்பலில் இருந்தவர்கள் இறக்கப்பட்டனர்.

கப்பலில் இருந்தவர்களில் 14 பேர் 4 நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிறிலங்காவைச் சேர்ந்த ஆறு பேர், சீனாவைச் சேர்ந்த 6 பேர், ஜமைக்கா மற்றும் ஈக்வடோரைச் சேர்ந்த தலா ஒருவர் அதில் இருந்தனர்.

இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *