கூட்டமைப்புக்குள் ஒற்றுமை அவசியம் – அறிவுரை கூறிய இந்திய வெளிவிவகாரச் செயலர்
தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, பிலக்குடியிருப்பு மக்கள், கேப்பாப்பிலவு விமானப்படை முகாம் முன்பாக 21 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று மாணவர்கள் ஒரு மணிநேர கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இன்று சிறிலங்கா அதிபர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புகளுடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தினார்.
சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கொங் சுவான்யோ சிறிலங்காவுக்குத் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவுடன் இந்த ஆண்டில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 19ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தக் காணிகள் தமக்கே சொந்தம் என்றும், அதற்குள் நுழைந்தால் சுடப்படுவீர்கள் என்றும் சிறிலங்கா விமானப்படை எச்சரித்துள்ளது.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதுரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக கப்டன் அசோக் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்த கப்டன் பிரகாஸ் கோபாலன், பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதை அடுத்தே, கப்டன் அசோக் ராவ், கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மென்பேர்ண் நகரில் நேற்று தமிழர்களும், சிங்களவர்களும் தனித்தனியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கைத்தொழில் முதலீட்டு வலயத்தில் முதலீடு செய்ய ஏற்கனவே இணங்கியிருந்த முதலீட்டாளர்களைத் திசை திருப்பி விடும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் எச்சரித்துள்ளார்.