மேலும்

Archives

யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமான யாழ் இசைக்கருவிகள் யாழ்ப்பாணத்துக்குக் கிடைத்தன

யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமாகிய யாழ் இசைக்கருவிகள் இரண்டு புலம் பெயர் தமிழர் ஒருவரால், யாழ். பொது நூலகத்துக்கும், யாழ்.பல்கலைக்கழகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மேலதிக இராணுவ ஒத்துழைப்பு – அமெரிக்கா

அமெரிக்க- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதானது, நல்லிணக்கம் மற்றும் நீதி செயல்முறைகளில் சிறிலங்காவின் முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் முக்கிய பதவி

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பொதுஉதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புலிகளுக்கு எதிரான போரின் போது வேவு பார்த்தது இந்திய விமானம் – ஒப்புக்கொள்கிறது இந்தியா

விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது, சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 : போட்டி முடிவுகள்

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவாக, காக்கைச் சிறகினிலே இதழ் சார்பில் நடத்தப்பட்ட புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 போட்டியில், புலம்பெயர் இணைய வலைப்பதிவர் தேர்வு  முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பசுபிக் சிறப்பு நடவடிக்கை தளபதி சிறிலங்கா பிரதமருடன் பேச்சு

அமெரிக்காவின் பசுபிக் சிறப்பு நடவடிக்கை கட்டளைப் பணியகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரயன் பென்டன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

சிறிலங்கா இராணுவத்தின் 50 ஆவது தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இன்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார்.

அஜித் டோவல் மீது சீறும் கோத்தா – ஆட்சி மாற்றத்துக்கு தூண்டியவராம்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் சீனா தொடர்பான இறுக்கமான நிலைப்பாடு தான், 2014இல் சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்தியாவைப் பணியாற்றச் செய்தது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மோடியின் சிறிலங்கா பயணம் – மகாநாயக்கர்களுக்கு இந்திய தூதுவர் விளக்கம்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்று கண்டியில் மகாநாயக்கர்களைச் சந்தித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

காங்கேசன்துறையில் ஐ.நாவின் இராணுவ வாகனத் தொடரணி

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இணைந்து கொள்ளவுள்ள சிறிலங்கா இராணுவ அணிக்கான பாரிய களப் பயிற்சி ஒத்திகை காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.