மேலும்

Tag Archives: கொழும்பு

நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்

பரந்துபட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், நாளை கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கு – தீர்ப்புக்கு எதிராக மீளாய்வு மனு தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சசிகலா ரவிராஜ் நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

தாஜுதீன் கொலை – சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகள் இருவரிடம் விசாரணை

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு வந்தது சீனக் கடற்படையின் ஆய்வுக் கப்பல்

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின், சமுத்திரவியல் ஆய்வுக் கப்பலான, குவான் சான்கியாங் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

திருகோணமலை மீது இந்தியாவுக்கு ஆர்வமில்லையாம்

திருகோணமலை மீது இந்தியா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிக்கத் திட்டம்

அடுத்த நான்கு ஆண்டுகளில் சிறிலங்காவின் வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதே தனது திட்டம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரிடம் நியமனப் பத்திரங்களை கையளித்தார் புதிய இந்தியத் தூதுவர்

சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தனது நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்து,  பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கொழும்பு நிதி நகரத்துக்கான 28 வீத நிலப்பரப்பு கடலில் இருந்து மீட்பு

கொழும்பு நிதி நகரத்தை அமைப்பதற்காக, கடலில் இருந்து 28 வீத நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய நிலப்பரப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கப்பட்டு விடும் என்றும் சீன துறைமுக பொறியியல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் ஏறுதழுவுதலுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள்

ஏறுதழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்துள்ள பெரும் போராட்டத்துக்கு, உலகத் தமிழர்களின் பேராதரவு கிடைத்துள்ள நிலையில், இன்று கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன.

ரவிராஜ் படுகொலை வழக்கு தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் கொழும்பில் மேல் நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.