மேலும்

Tag Archives: கொழும்பு

நீர்மூழ்கிக்கு அனுமதி மறுப்பு– சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நழுவல்

சீன நீர்மூழ்கிக் கப்பல் சிறிலங்காவில் தரித்துச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் உரிய பதில் அளிக்காமல் நழுவியுள்ளார்.

மோடியின் பாதுகாப்புக்காக நான்கு உலங்குவானூர்திகள் கொழும்பு வருகை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான நான்கு சிறப்பு உலங்கு வானூர்திகள் நேற்று கொழும்புக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பில் வலுவடையும் கருத்து வேறுபாடுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக்களை அடுத்து, கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள் வலுவடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது மற்றொரு பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் சுல்பிகார் என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின் கடல்சார் பாதுகாப்புக் கப்பலான பிஎம்எஸ்எஸ் டாஸ்ட் (‘Dasht’ ) நல்லெண்ணப் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

ஒருபோதும் நாட்டைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர் உறுதி

நான் ஒருபோதும் நாட்டைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கண்டி-கெடம்பே மைதானத்தில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேநாள் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுக கொள்கலன் முனைய அபிவிருத்தியும் இந்தியாவிடம் ஒப்படைப்பு

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பான அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் இந்த மாத இறுதியில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பில் ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி

சிறிலங்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைப்பார் என்று சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மோடியின் கொழும்பு பயணத்தின் போது கூட்டு அபிவிருத்தி உடன்பாடு செய்ய தயாராகும் சிறிலங்கா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, கூட்டு அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.