ஜனவரி 27 இல் உள்ளூராட்சித் தேர்தல் – அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு
உள்ளூராட்சித் தேர்தலை வரும் ஜனவரி 27ஆம் நாள் நடத்துவதற்கு, நேற்று நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் தலைமையில் நேற்று அரசியல் கட்சிகளுடன் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

