டக்ளசை 90 நாள்கள் தடுத்து வைக்க அனுமதி கோரிய சிஐடி – நிராகரித்த அமைச்சர்
ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை 90 நாள்கள் தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்து விட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 90 நாள்கள் தடுப்புக்காவல் உத்தரவைக் கோரியிருந்தனர்.
ஆனால் அந்தக் கோரிக்கையை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்துள்ளார்.
இதையடுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரை 72 மணி நேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா ககாவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளத.
கடந்த வெள்ளிக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, பின்னர் கைது செய்யப்பட்டார்.
72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியானால், நாளை அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
