மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

ரணிலுடன் மகிந்த இரகசியச் சந்திப்பு – மகனைக் காப்பாற்ற மன்றாடினாரா?

சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

தன்னையும் இராணுவத்தினரையும் போர்க்குற்றங்களில் சிக்கவைக்க முயற்சி என்கிறார் மகிந்த

தன்னைப் போர்க்குற்ற வழக்கில் சிக்க வைக்கவும், தன்னையும், சிறிலங்கா இராணுவத்தினரையும் காட்டிக்கொடுத்து ஆட்சியைத் தக்கவைக்கவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

மகிந்தவிடம் இன்று விசாரணை – கைது செய்யப்படக் கூடும் என்று பரவலாக வதந்தி

அதிபர் தேர்தல் பரப்புரைக்காக சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரங்களை ஒளிபரப்பிய கட்டணத்தைச் செலுத்த தவறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இன்று நிதிமோசடிகள் குறித்து  விசாரிக்கும் அதிபர் ஆணைக் குழுவினால் விசாரிக்கப்படவுள்ளார்.

மகிந்தவைக் கண்டு ஊடகங்கள் இன்னமும் அஞ்சுகின்றன – அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மீது ஊடகங்கள் இன்னமும் அச்சம் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல.

கடாபியின் தோளில் நான் கைபோடவில்லை – மறுக்கிறார் மகிந்த

தாம் லிபிய அதிபராக இருந்த முவம்மர் கடாபியின் தோளில் கைபோடவில்லை என்றும், அவர் தனது தோளில் கைபோட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார் சி்றிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஜெனிவா தீர்மானம் இராஜதந்திர வெற்றியல்ல – என்கிறார் மகிந்த

ஐ.நாமனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது, சிறிலங்காவுக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி என சிலர் குறிப்பிடும் கருத்துடன் தன்னால் உடன்பட முடியாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

மகிந்தவைக் காப்பாற்றிவிட்டோம், படையினருக்கும் துரோகம் செய்யமாட்டோம் – ரணில் கூறுகிறார்

மகிந்த ராஜபக்சவை தூக்குக்கயிறில் இருந்து நாமே காப்பாற்றி விட்டோம், எந்தச் சந்தர்ப்பத்திலும் படையினருக்குத் துரோகம் இழைக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஐ.நா அறிக்கையின் காரம் குறைக்கப்படவில்லை – என்கிறார் மகிந்த ராஜபக்ச

போர்க்குற்ற நீதிமன்றத்தை அமைக்கும் அதிகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கோ, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கோ கிடையாது என்றும், எனவே, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டாராம் மகிந்த

ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு நீதிமன்ற விசாரணையை நிராகரித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, எந்தவழியிலும் தான் அதற்கு ஒத்துழைக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்தியாவால் மட்டுமே சிறிலங்காவை காப்பாற்ற முடியும் – கேணல் ஹரிகரன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கு அமெரிக்கா உடன்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி சிறிலங்காவுக்குத் தேவைப்படுகிறது.