மேலும்

ஜெனிவா தீர்மானத்துக்கு மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவிற்கு 22 நாடுகள் இணை அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளன.

சிறிலங்காவுக்கு 37 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன்

சிறிலங்காவுக்கு 37 பில்லியன் அமெரிக்க டொலர் ( ரூ. 19.6 ட்ரில்லியன்) வெளிநாட்டுக் கடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதிக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் பிட்ஸ்ஜெரால்ட் ( USS FITZGERALD (DDG 62) கொழும்புத் துறைமுகத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

வடக்கின் பொருளாதார உள்கட்டமைப்புகளை அரசாங்கம் புறக்கணிப்பு

பலாலி விமான நிலையம் ,காங்கேசன்துறை துறைமுகம் போன்ற வடக்கின் முக்கியமான பொருளாதார உள்கட்டமைப்பை சிறிலங்கா அரசாங்கம் புறக்கணிப்பதாக இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

சபுகஸ்கந்தவில் முதலீடு செய்ய அமெரிக்கா, சீனா, ஜப்பான் போட்டி

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் முதலீடு செய்வதற்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட  நாடுகள் ஆர்வம்காட்டியுள்ளனர்.

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல் – மலைக்க வைக்கும் சொத்துகள் விபரம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கேணல் நெவில் வன்னியாராச்சியை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரகம   உத்தரவிட்டுள்ளார்.

புதிய எல்லை நிர்ணய செயல்முறைக்கு ஓராண்டு தேவைப்படும்

புதிய எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பின்னரே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால், அதை விரைவிலேயே தொடங்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தடைகளால் சிறிலங்கா முழு நன்மைகளையும் அடைய முடியாது

அமெரிக்கத் தடைகள் காரணமாக, ரஷ்யா-சிறிலங்கா இடையில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் முழு பொருளாதார நலன்களையும் அடைய முடியாது என்று, சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் லெவன் சகார்யன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது வழக்குத் தொடரப்படுமா?

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆணைக்குழு முடிவு செய்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ரங்க திசாநாயக்க தெரித்துள்ளார்.

மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின், தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.