அரசியலமைப்பு பேரவைக்கு ஒஸ்டின் பெர்னான்டோ உள்ளிட்ட 3 பேர் நியமனம்
அரசியலமைப்பு பேரவைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத – சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூன்று பேரை நியமிப்பதற்கு, சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
அரசியலமைப்பின் 41A (4) மற்றும் (5) பிரிவுகளின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக, பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைய, அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களாக ஒஸ்டின் பெர்னாண்டோ, பேராசிரியர் வசந்த செனவிரத்ன மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரை நியமிப்பதற்கு, நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
சிவில் சமூக பிரதிநிதிகளாக இவர்களை நியமனம் செய்வதற்கு, பிரதமர் ஹரிணி அமரசூரியவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒப்புக்கொண்டு இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.
