இந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர் அந்நிய முதலீட்டுக்கு சிறிலங்கா இலக்கு
இந்த ஆண்டு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான இலக்கை சிறிலங்கா முதலீட்டு சபை நிர்ணயித்துள்ளது.
கடந்த ஆண்டு, சிறிலங்கா 1.057 பில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது.
2025 ஆம் ஆண்டில், மொத்தம் 186 நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வத்தை வெளிப்படுத்தின.
அவற்றில், 146 திட்டங்கள் 1.906 பில்லியன் டொலர் மதிப்பில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன.
இதில் 70 புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள முயற்சிகளின் 76 விரிவாக்கங்களும் அடங்கியிருந்தன.
