78 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சியானப் பதிவு செய்யப்படுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட, 78 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து கொள்வதற்காக, 83 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 78 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அரசியல் கட்சியாக அங்கீகரிக்கத் தேவையான அடிப்படை அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறியதே பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்குக் காரணம்.
2025 ஆம் ஆண்டில் விண்ணப்பித்த ஐந்து கட்சிகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உட்பட, சிறிலங்காவில் தற்போது 85 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இருப்பதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
