விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராக அட்மிரல் காஞ்சன பனாகொட
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் காஞ்சன பனாகொட, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் காஞ்சன பனாகொட, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா மக்களில் 79 சதவீதமானோர் இந்தியாவை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றில் முன்வைத்துள்ள, அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மக்கள் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால், அதனை பொதுவாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அட்டமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், நீதிமன்றத்திற்குள் நீதிவானுக்காக ஒதுக்கப்பட்ட நுழைவாயில் வழியாக நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் இந்த வாரம் கொழும்பு வந்து தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
ஈரானின் 17 எண்ணெய் தாங்கி கப்பல்கள், காலி கடற்கரைக்கு அப்பால் சிறிலங்காவின் பொருளாதார கடல் எல்லைக்குள் சுமார் ஒரு மாதமாக நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச்சபையின் 81வது உயர்மட்டப் பொது அமர்வில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பார் என “சண்டே ரைம்ஸ்“ செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை நீடிக்க வேண்டாம் என்று, அவரது மனைவி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ச ஆகியோருக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.