மேலும்

நான்கில் ஒரு பங்கு நிதியை விழுங்கும் சிறிலங்கா அதிபரின் அமைச்சுக்கள்

2026ஆம் ஆண்டுக்கான சிறிலங்காவின் வரவுசெலவுத் திட்டத்தில், அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சுக்களுக்கு நான்கில் ஒரு பகுதி நிதி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் எரிசக்தித் துறையில் நுழையும் அமெரிக்கா

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியக அதிகாரிகள் கடந்த வாரம்,  சிறிலங்காவுக்கு வந்து அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிறிலங்கா மீது விதித்த வரிகள் தொடர்பாக எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து, கலந்துரையாடுவதற்காக அவர்கள் வந்திருந்தனர்.

புதன்கிழமை ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுகிறார் சிறிலங்கா அதிபர்

நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபையின் 79வது அமர்வில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை உரையாற்றவுள்ளார்.

பந்து சிறிலங்காவின் கையில் என்கிறார் ரஷ்ய தூதுவர்

அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு சிறிலங்காவுடன், ஒத்துழைக்க ரஷ்யா தயாராகவே இருப்பதாக சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர், லெவன் சகார்யான்  ( Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார்.

பாதாள உலகத்துக்கு ஆயுதங்களை விற்ற மற்றொரு கொமாண்டோ அதிகாரி கைது

சிறிலங்கா இராணுவ கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி, பாதாள உலக குழுவினருக்கு ஆயுதங்களை விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆட்கடத்தல் வழக்கிலேயே முன்னாள் கடற்படை புலனாய்வு பணிப்பாளர் கைது

2010ஆம் ஆண்டு இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாகவே,  சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற றியர் அட்மிரல் சரத் மொஹோற்றி கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை சிறையில் கேக் வெட்டி கொண்டாடிய பிள்ளையான்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர்,  மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கேக் வெட்டி கொண்டாடியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- அடுத்த வாரம் முடிவு

சபாநாயகர்  ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவர் குறித்து, ஆராய்ந்து வருவதாகவும், அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எதிர்பார்க்கப்படும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் கைது

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற றியர் அட்மிரல் சரத் மொகோற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலைக்கு அப்பால் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை

திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.