தையிட்டி விகாரைக்கு எதிரான பெரும் போராட்டம்- பெருமளவில் காவல்துறையினர் குவிப்பு.
தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத விகாரையை அகற்றி பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க கோரி பௌர்ணமி தோறும், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பௌர்ணமி நாளான இன்று, காலை 8 மணி தொடக்கம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில், காணி உரிமையாளர்களுடன், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், மதகுருமார் எனப் பெருமளவிலானோர் பங்கு கொண்டனர்.
இந்த நிலையில் பெரும் எண்ணிக்கையான சிறிலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்ற நிலை காணப்பட்டது.
சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறை புலனாய்வாளர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுப்பவர்களை கண்காணிப்பதில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.







