2025இல் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 5.6 வீதம் வீழ்ச்சி
2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாவின் மதிப்பு பலவீனமடைந்து, 5.6% ஆண்டுத் தேய்மானத்தை பதிவு செய்துள்ளது.
இது, முந்தைய இரண்டு ஆண்டுகளில் அடையப்பட்ட சாதகமான நிலையை மாற்றியமைப்பதாக அமைந்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் சிறிலங்காவின் நாணய மதிப்பு முறையே 12.1% மற்றும் 10.7% அதிகரித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
இறுக்கமான பணவியல் கொள்கை, இறக்குமதி கட்டுப்பாடுகள், அதிகரித்த வெளிப்புற இருப்புக்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய சீர்திருத்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்ட வரவுகள் ஆகியவற்றால் சிறிலங்காவின் நாணய மதிப்பு முறையே அதிகரித்தது.
2025 ஆம் ஆண்டின் ஏற்பட்டுள்ள நாணய மதிப்புச் சரிவு, 2022 ஆம் ஆண்டு நாணய நெருக்கடிக்குப் பின்னர், காணப்பட்ட உறுதிப்படுத்தல் போக்குடன் முரண்படுவதாக உள்ளது.
2022இல், ரூபா மதிப்பு 44.8% சரிந்தது. இந்த நெருக்கடிக்கு முன்னர் ரூபா தொடர்ந்து பலவீனமடையும் சார்பைக் காட்டியது. இது 2021 இல் 7% ஆகவும், 2020 இல் 2.6% ஆகவும் மதிப்புக் குறைந்தது.
அதே நேரத்தில் 2019 இல் 0.6% என குறைந்தளவு மதிப்பிறக்கத்தைப் பதிவு செய்திருந்தது.
