மேலும்

2026இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்கும் சிறிலங்கா

சிறிலங்கா 2026 ஆம் ஆண்டில்  3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டிருப்பதாக,  சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம்  தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற இலக்கை எட்டியுள்ளோம்.

இந்த ஆண்டில் நாங்கள் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அடைய இலக்கு வைத்துள்ளோம்.

மேலும் 5 பில்லியன் டொலர் வருவாயை எட்ட இலக்கு வைத்துள்ளோம். அது ஒரு சவாலான எண்ணிக்கையாக இருக்கலாம்.

ஆரம்பத்தில் 2025 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காக வைத்த போதும், பின்னர்  அது 2.4 மில்லியனாகக் குறைக்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் சூறாவளி  தாக்கம் இருந்தபோதிலும், டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் வருகை அதிகரித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *