மேலும்

சிறிலங்கா செல்லும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை

சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பிரித்தானிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசுக்கு டோவல் கொடுத்துள்ள ‘பலமான’ செய்தி

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சிறிலங்கா அரசாங்கத்துக்கு ‘பலமான’ செய்தி ஒன்றைக் கூறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கோத்தாவும் பரப்புரையில் இறங்கினார் – தேர்தல் விதிமுறையை மீண்டும் மீறுகிறார்

வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார்.

புலிகளைத் தோற்கடித்த சிறிலங்காவுக்கு அஜித் டோவல் பாராட்டு

விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசாங்கம் வெற்றிகரமாகத் தோற்கடித்ததற்கு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பாராட்டுத் தெரிவித்துள்ளார். (இரண்டாம் இணைப்பு)

தமிழர்களுக்கு சிறிலங்கா சமஉரிமையை வழங்க வேண்டும் – வெங்கய்ய நாயுடு

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு சம உரிமையையும், சமமான வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்று இந்தியாவின் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

எதிரணியின் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்தானது

அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்றுகாலை புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதலுக்கு சூட்டப்பட்ட பெயர்- ‘திருமண மண்டபம்’

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது நடத்தப்படவிருந்த தற்கொலைத் தாக்குதலுக்கு திருமண மண்டபம் (wedding hall)  என்று பாகிஸ்தானிய உளவுப்பிரிவினால் பெயரிடப்பட்டிருந்ததாக, இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து கவலையில்லை – என்கிறார் மகிந்த

தன் மீது சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து தான் கவலை கொள்ளவில்லை என்று மாத்தறையில் நேற்றுமாலை நடந்த கூட்டம் ஒன்றில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசு, இராணுவம் மீதான போர்க்குற்ற ஆதாரங்கள் ஐ.நா விசாரணைக்குழுவிடம் ஒப்படைப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த, சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சாட்சியங்களுடன் கூடிய விரிவான அறிக்கை ஒன்று, அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நிலையத்தினால், ஐ.நா விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.