மேலும்

சிறிலங்கா இராணுவத்தின் அதிபர் பாதுகாப்பு பிரிவு கலைப்பு

President's Guardசிறிலங்கா இராணுவத்தில் இருந்த, அதிபர் பாதுகாப்புப் பிரிவு (President’s Guard) கலைக்கப்பட்டு, அதிலிருந்து படையினர், தத்தமது படைப்பிரிவுகளுக்குச் செல்லப் பணிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 30ம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா இராணுவத்தில் இருந்த அதிபர் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்  ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

இந்தப் படைப்பிரிவில் இருந்த சிறிலங்கா இராணுவத்தினர், முன்னர் இருந்த படைப்பிரிவுகளுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

2008ம் ஆண்டு, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புக்காக, இந்தப் புதிய படைப்பரிவு உருவாக்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவுடன் (President’s Security Division) இணைந்ததாக, சிறிலங்கா இராணுவத்தின் அதிபர் பாதுகாவலர் பிரிவு (President’s Guard) உருவாக்கப்பட்டிருந்தது. அப்போது இதில் 1200 சிறிலங்கா இராணுவத்தினர் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

President's Guard

சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்பட்ட போது – சரத் பொன்சேகா- ஜெகத் அல்விஸ்

mahinda-psdஅதன் தளபதியாக, கோத்தாபய ராஜபக்சவுக்கு நம்பிக்கையான மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

அம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு வளையம், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியைச் சேர்ந்த கோப்ரல் ஒருவரால் ஊடறுக்கப்பட்ட சம்பவத்தையடுத்தே, இராணுவத்தின் அதிபர் பாதுகாப்பு பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.

எனினும், சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *