கோத்தாவின் சுய வரலாற்று நூல் வெளியீடு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவின் சுயவரலாற்று நூலான, ‘கோத்தாபய’ கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவின் சுயவரலாற்று நூலான, ‘கோத்தாபய’ கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.
அதிபர் தேர்தலில் குமார வெல்கமவை வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என, அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது பெயரைப் பரிந்துரைத்தால், வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் தீர்த்தக் கேணியில் பௌத்த பிக்குவின் சடலத்தை எரித்த சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டன பேரணி இடம்பெற்றது.
தமது 480 மில்லியன் டொலர் கொடையை சிறிலங்கா இன்னமும் இழந்து விடவில்லை என்று, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்த, பௌத்த பிக்குவின் சடலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
விமானப்படை, கடற்படையுடன் இணைந்து, சிறிலங்கா இராணுவம், நடத்தி வரும் நீர்க்காகம்- X கூட்டுப் பயிற்சியின் இறுதி ஒத்திகை இன்று திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெறவுள்ளது.
ஒரு சர்வாதிகாரியை நாட்டின் அதிபராக உயர்த்துவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இல்லை என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஐதேகவின் அதிபர் வேட்பாளரை, வரும் வியாழக்கிழமை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி நிறுத்தவுள்ள அதிபர் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவைப் பெறுவது எவ்வாறு என்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.