ஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு
ஐதேகவின் அதிபர் வேட்பாளரை, வரும் வியாழக்கிழமை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவு அலரி மாளிகையில், ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடந்த இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்கள் வஜிர அபேவர்த்தன, லக்ஸ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, தயா கமகே ஆகியோர் பங்கேற்றனர்.
இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்காக கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை வியாழக்கிழமை கூட்டுவதற்கும் இந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.