எம்சிசி கொடையை சிறிலங்கா இன்னமும் இழக்கவில்லை – அமெரிக்கா
தமது 480 மில்லியன் டொலர் கொடையை சிறிலங்கா இன்னமும் இழந்து விடவில்லை என்று, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மிலேனியம் சவால் நிறுவனத்தின் சிறிலங்காவுக்கான வதிவிட பணிப்பாளர் ஜென்னர் எடெல்மன் கருத்து வெளியிடுகையில்,
‘கடந்த வாரம் மிலேனியம் சவால் நிறுவனத்தின் சபை கூட்டத்தில் சிறிலங்காவுக்கான கொடை உடன்பாடு தாமதமடைவது குறித்து பேசப்பட்டது. அடுத்த நகர்வு குறித்தும் ஆராயப்பட்டது.
ஆண்டு தெரிவு செயல்முறைகள் குறித்த சபையின் அடுத்த கூட்டம் டிசம்பர் மாதம் நடைபெறும். அப்போது, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும்.
சிறிலங்காவுக்கானகொடை தொடர்பான இறுதி முடிவு டிசெம்பர் மாதமே எடுக்கப்படும்.
இப்போது நாம் அதிகமாக எதையும் செய்யமுடியாது. டிசெம்பர் கூட்டத்திற்கு முன்னர், புதிய அரசாங்கத்தின் கீழ், இதை அங்கீகரிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இதற்கு நேரம் எடுக்கும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.