மேலும்

பிரிவு: செய்திகள்

வரும் 18ம் நாள் நள்ளிரவு வெளியாகிறது அதிபர் தேர்தல் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்துக்கு எதிராக, வரும் 24ம் நாள் நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக, எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தியுள்ளன.

3 நிபந்தனைகளுக்கு இணங்கும் வேட்பாளருக்கே ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு வேட்பாளருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நீர்மூழ்கி வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தருவதில்லை – சிறிலங்கா மீது இந்தியா விசனம்

சீன நீர்மூழ்கிகளின் கொழும்பு வருகை பற்றிய தகவல்களை சிறிலங்கா முன்கூட்டியே தெரியப்படுத்துவதில்லை என்று இந்தியா விசனம் தெரிவித்துள்ளது.

புலிகளுக்கு நோர்வே அளித்த உதவிகள் குறித்து விசாரிக்க வேண்டும் – மகிந்த ராஜபக்ச

நோர்வேயின் முன்னைய அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு அளித்த நிதியுதவிகள் குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன் போராளியாக இருந்தவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விடுலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவரை, புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறி சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

சாட்சியங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியது ஐ.நா விசாரணைக்குழு

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைக்கான சாட்சியங்கள் சேகரிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.

சிறிலங்காவைக் கடனாளியாக்குகிறது சீனா – இரா.சம்பந்தன்

சிறிலங்காவுக்கு சீனா வழங்கியுள்ள நிதி உதவிகளில், 98 வீதமும் கடன்கள் தான் என்றும், வெறும் 2 வீதம் மட்டுமை நன்கொடைகள் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைகிறாராம் சம்பந்தன் – பீரிஸ் குற்றச்சாட்டு

சீனாவுடனும், இந்தியாவுடனும், சுமுகமான உறவை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.

பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக வெளியான செய்திகள் பொய் – சிறிலங்கா அதிபர் செயலகம்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக, நேற்று இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களை சிறிலங்கா அதிபர் செயலகம் நிராகரித்துள்ளது.