மேலும்

பிரிவு: செய்திகள்

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் கூட்டமைப்பு இன்னும் இணையவில்லை – இரா.சம்பந்தன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து  வேட்பாளரை நிறுத்தவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியில், இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளவில்லை என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பொதுமன்னிப்புக்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – சிறிலங்கா அதிபரின் பேச்சாளர்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2ம் நாள் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு

அதிபர் தேர்தலை வரும் ஜனவரி 2ம் நாள் வெள்ளிக்கிழமை நடத்த சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்தால், அதற்கு முஸ்லிம்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று மூத்த அரசாங்க வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்தால் சீனாவைப் புறந்தள்ளுவோம் – ஐதேக எச்சரிக்கை

தாம் ஆட்சிக்கு வந்தால், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்துடன், சீன நிறுவனங்கள் செய்து கொண்டுள்ள உடன்பாடுகள் செல்லுபடியற்றதாகி விடும் என்று ஐதேக எச்சரித்துள்ளது.

மகிந்தவின் நிபந்தனைக்கு அடிபணிய இந்தியா மறுப்பு

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களையும், உடனடியாகவும், நிபந்தனைகளின்றியும் சிறிலங்கா அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சம்பந்தன், ஹக்கீம் இந்தியத்தூதுவருடன் 3 மணிநேரம் மந்திராலோசனை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார்.

வெள்ளாங்குளத்தில் தமிழீழ காவல்துறையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக்கொலை

மன்னார் – வெள்ளாங்குளத்தில் இன்றிரவு இனந்தெரியாத நபர்கள் வீடு ஒன்றுக்குள் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய பேரணி – மங்களவும் இணைந்தார்

நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கு எதிராக சிறிலங்காவின் முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து  கொழும்பில்  இன்று மாலை பாரிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளன.

வன்னியில் இரு வாரங்களுக்குள் மூன்று பௌத்த வழிபாட்டுத் தலங்கள் திறப்பு – தீவிரம் பெறும் ஆக்கிரமிப்பு

வன்னியில் சிறிலங்காப் படையினர் நிலை கொண்டுள்ள பகுதிகளில், புதிய பௌத்த வழிபாட்டுத் தலங்களை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

12 கொமன்வெல்த் நாடுகளில் தகைமையற்ற தூதுவர்கள் – சிறிலங்கா அரசு ஒப்புதல்

கொமன்வெல்த் நாடுகளில் பணியாற்றும் சிறிலங்கா தூதுவர்களில், இரண்டு பேர் மாத்திரமே, அந்தப் பதவிக்குத் தகைமையானவர்கள் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றுத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.