மேலும்

பிரிவு: செய்திகள்

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்த முடியாது – சிறிலங்கா அமைச்சர்

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தை இந்தியா வற்புறுத்த முடியாது என்று சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தாயகம் திரும்பிய 5 இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் மீண்டும் தஞ்சம்

திருக்கோணமலையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அகதிகளாக படகு மூலம் இன்று தமிழ்நாட்டை வந்தடைந்தனர்.

இன்றுடன் முடிகிறது சீன – சிறிலங்கா படைகளின் ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு-2015’ போர்ப்பயிற்சி

சீன – சிறிலங்கா படைகள் இணைந்து நடத்தும், ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு-2015’ என்ற குறியீட்டுப் பெயரிலான, இருபது நாள் கூட்டுப் போர்ப்பயிற்சி இன்றுடன் நிறைவடையவுள்ளது.

தமிழிலேயே பாடுங்கள் என்று தமிழர்களுக்கு அறிவுரை கூறிய சிறிலங்கா அமைச்சர்

வடக்கு, கிழக்கில் சிறிலங்காவின் தேசிய கீதத்தை தமிழிலேயே பாடுங்கள் என்று சிறிலங்காவின் சிங்கள அமைச்சர் ஒருவரே தமிழர்களுக்கு அறிவுரை கூற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தெற்காசியா வேகமான வளர்ச்சி; சிறிலங்கா வேகமான வீழ்ச்சி- எச்சரிக்கும் உலக வங்கி

தெற்காசியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற போதிலும், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு, 6.9 வீதமாக குறைவடையும் என்று உலக வங்கி அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.  

சீனாவுடன் முரண்பாடு ஏற்பட மகிந்தவே காரணம் – ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு

தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவைப் போல, விசாரணைக்குழுவொன்றை நியமித்து, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கலாம் என்று தான் கூறிய ஆலோசனையை மகிந்த ராஜபக்ச நடைமுறைப்படுத்தியிருந்தால், ஐ.நா தீர்மானங்களை தவிர்த்திருக்கலாம் என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நிதிஅமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- மகிந்த வீட்டில் தீர்மானம்

சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்றைய சாதகமான சூழலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன்

அனைத்துலக சமூகமும், சிறிலங்கா அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையை, நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் மீண்டும் பூச்சிய நிலைக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜேவிபியில் இருந்து விலகினார் சோமவன்ச – மீண்டும் பிளவுபடுகிறது கட்சி

ஜேவிபியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து ஜேவிபி மீண்டும் பிளவுபடும் நிலை தோன்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நௌருவில் உள்ள அகதிகளை கம்போடியாவில் குடியேற்றுகிறது அவுஸ்ரேலியா

நௌரு தீவில் உள்ள அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் கம்போடியாவில் குடியேற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.