மேலும்

பிரிவு: செய்திகள்

நியாயமான விசாரணை நடத்த தவறியதால் தான் ஐ.நா விசாரணை – இரா. சம்பந்தன்

போர்க்குற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் நியாயமான விசாரணைகளை நடத்தியிருந்தால், ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டிருக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கதிகலங்கிப் போனது கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையப் பணியாளர்கள் இன்று காலை நடத்திய திடீர் பணிநிறுத்தப் போராட்டத்தினால், சிறிலங்காவுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும்” – சிறிலங்கா அமைச்சர் கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார், சிறிலங்காவின் தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர.

மீனவர்களுக்கு மரணதண்டனை: இந்திய மக்களின் உணர்வுகளை சிறிலங்காவிடம் பரிமாறியது இந்தியா

சிறிலங்கா நீதிமன்றத்தினால், தமிழ்நாட்டு மீனவர்கள் ஐவருக்கு அண்மையில், விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை குறித்து, இந்திய மக்களின் உணர்வுகளை சிறிலங்காவிடம் இந்தியா தெரியப்படுத்தியுள்ளது.

அரச செலவினம் 356 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பு – வரவுசெலவுத் திட்டத்தில் திருத்தம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடந்து வரும் நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுப் பிரேரணையில் சிறிலங்கா அரசாங்கம் நேற்று திருத்தங்களை முன்வைத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்

சிறிலங்காவின் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு, நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி மாவட்டம் கிடையாது – சிறிலங்கா அரசு அறிவிப்பு

கிழக்கில் முஸ்லிம்களுக்குத் தனி மாவட்டத்தை அமைக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் குழுவுக்கு எந்த உரிமையும் இல்லை – சிறிலங்கா கூறுகிறது

சிறிலங்கா அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் குழு அண்மையில் விடுத்திருந்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அநாதரவான பிள்ளைகளுக்கு கல்வி வசதி செய்து கொடுக்கத் தயார் – மீரியபெத்தவில் முதல்வர் விக்னேஸ்வரன்

பாரிய மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்ற பதுளை,  மீரியபெத்த பிரதேசத்துக்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டதுடன், அனாதரவாக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கல்வி வழங்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“கூட்டமைப்பைக் கொச்சைப்படுத்த வேண்டாம்” – மத்திய மாகாணசபை உறுப்பினர் ராஜாராம்

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கில் காணிகளை வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்வுபூர்வமாக வெளியிட்ட கருத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்  என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.